கிருத்துவராக இருந்தாலும், இந்துவாக இருந்தாலும், இஸ்லாமியராக இருந்தாலும், மனிதன் அனுபவிக்கும் கஷ்ட நஷ்டங்கள், சுக துக்கங்கள் ஒன்றாகத்தானே இருக்கின்றன. என்னை பொருத்தவரையில் மனிதனே கடவுள். நமக்கும் மேலே இருந்து ஒரு கண்ணுக்குப் புலப்படாத ஒரு சக்தி நம்மையெல்லாம் ஆண்டு கொண்டிருக்கிறது.
இந்த பூமியில் தன்னுடைய வசதிக்கிற்காக மனிதன் தனக்குத்தானே உண்டாக்கிக் கொண்டதுதான், இந்த மதங்கள் அனைத்துமே. மதங்கள் மனிதனை ஒரு கட்டுக்கோப்புக்குள் வைத்திருக்க உதவுகிறது. மனிதன் தவறுகள் செய்யாதிருக்க சில பல விதிமுறைகளை பின்பற்ற கற்று கொடுக்கிறது. இன்த விதி முறைகள் அவரவர் பிறந்த இடத்திற்கு தக்கவாறு மாறுபடுகிறது. இவையெல்லாம் ஆண்டடுகாலமாக கிருஸ்து, கிருஷ்ணன், அல்லா என்று மக்கள் தன் வசதிக்கேற்ப தன்னுடைய சூழ் நிலைக்கு தகுந்தவாறு பின் பற்றி வருகிறார்கள்.
இதைப் புரிந்து கொள்ளாத சில மனிதர்கள், மதமென்னும், மதம் பிடித்து திரிகிறார்கள். இந்த மதத்தை கடைப்பிடித்தால் நாட்டில் பஞ்சம் அறவே அழிந்துவிடும், புற்று நோய் ஒழிந்துவிடும், மக்கள் ஒரு கஷ்டமும் இல்லாமல் இனிய முகத்தோடு, கடுஞ் சொல் கூறாமல் வாழ்கிறார்கள் என்று யாராவது சொல்லட்டும், அந்த மதத்தில் சேருவதற்கு நான் தயார். ஆகவே மக்களே யாரும் சொல்கிறார்கள் என்று உங்களுடைய தனித்துவத்தை எப்போதும், விட்டுக் கொடுக்காதீர்கள்.
முதல் வணக்கம்
Labels:
அறிமுகம்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment